அக்டோபர் முதல் தேதியிலிருந்து நெகிழிப்பைகளுக்கு தடை

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 26-

நாட்டின் முன்னணி பேரங்காடி மையங்கள்,பசார் ராயா – க்கள் மற்றும் பல்பொருள் விற்பனைத் தளங்கள் என சங்கிலித்தொடர்பு வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள 20 நிறுவனங்களின் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளில் வரும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து நெகிழிப்பைகள் பயன்பாட்டிற்கு முற்றாக தடை விதிக்கப்படவிருக்கிறது.

நெகிழிப்பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சங்கிலித் தொடர்பு வர்த்தக நிறுவனங்களில் 99 Speedmart, Aeon, 7- Eleven, TF Value mart மற்றும் Guardian ஆகியவை அடங்கும் என்று வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

நெகிழிப்பைகள் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கும் AKUJANJI ஒப்பந்தத்தில் அந்த நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிப்பைகளுக்கு இனி அனுமதியில்லை என்ற பிரச்சாரத்தை இன்று அதிகாரப்பூர்மாக தொடக்கி வைத்தப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அமைச்சர் ங்கா கோர் மிங் Nga இதனைத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்