ஷா ஆலம், செப்டம்பர் 26-
மலேசியாவில் இணைய சைபர் பாதுகாப்பு கல்விக்கழகம், அடுத்த ஆண்டில் இரண்டாவது காலண்டில் செயல்படத் தொடங்கும் என்று இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
இணைய அத்துமீறல்கள், ஊடுருவல்கள், தரவுகள் திருட்டு போன்றவ சம்பவங்களை முறியடிக்கும் சைபர் பாதுகாப்பு மீதான குறித்து பலதரப்பட்ட பயிற்சிகள் இந்த கல்விக்கழத்தில் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தொழில்நுட்ப பயற்சி மற்றும் தொழில் பயிற்சியான TWET அடிப்படையில் இப்பயிற்சிகள் வழங்கப்படுவது மூலம் சைபர் பாதுகாப்புத்துறைக்கு தேவைப்படக்கூடிய திறன்வாய்ந்த ஆள்பலத்தை உருவாக்கும் மையமாகவும் இது திகழும் என்று கோபிந்த் சிங் டியோ குறிப்பிட்டார்.