ஜன.9-
ஜார்ஜ்டவுன், பண்டார் ஸ்ரீ பினாங்கில் கர்ப்பால் சிங் டிரைவ் சாலைக்கு அருகில் வெடிகுண்டைப் போல் கிடந்த ஒரு மர்மப் பொருள், அப்பகுதி மக்களை கதிகலங்க வைத்த வேளையில் அது வெடிகுண்டு அல்ல என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
அந்த மர்மப் பொருள் குறித்த போலீசார் மேற்கொண்ட சோதனையில் காகிதம், கம்பிகள், சிமெண்ட் போன்ற கலவையைக் கொண்ட அந்தப் பொருள், வெடிகுண்டு அல்ல என்பது உறுதி செய்யப்பட்டதாக ஜார்ஜ்டவுன் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. அப்துல் ரசாக் முகமட் தெரிவித்தார்.