ஜன.9-
ஜோகூர்பாரு, தாமான் செத்தியா இண்டாவில் உள்ள ஓர் உணவகத்தில் நேற்று மதியம் 12 மணியளவில் நபர் ஒருவர், அடையாளம் தெரியாத ஆசாமியினால் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சியைக் கொண்ட காணொளியை பகிர வேண்டாம் என்று பொது மக்களுக்கு ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் அறிவுறுத்தியுள்ளார்.
40 வயது மதிக்கத்தக்க அந்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பில் தவறான தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று டத்தேரா குமார் நினைவுறுத்தினார்.
இத்தகைய நடவடிக்கைகள் போலீசாரின் விசாரணையை பாதிக்கும் என்பதால் இக்கொலை தொடர்பில் ஆருடம் கூற வேண்டாம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.