அமைச்சர் மகன் சம்பந்தப்பட்ட விசாரணை அறிக்கை தயாராகிவிட்டது- ஐஜிபி கூறுகிறார்

ஜன.9-

சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருப்பதைப் போல அமைச்சர் ஒருவரின் மகன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரம் மீதான விசாரணை அறிக்கை, தயாராகி விட்டதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

போலீசார் மேற்கொண்ட விசாரணை அறிக்கை கடந்த திங்கட்கிழமை துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. நடப்பு சட்டத்திற்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

குற்றம் இழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அரச மலேசியப் போலீஸ் படை தயாங்காது, விட்டுக்கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்காது என்பதையே இது காட்டுகிறது என்று டான்ஸ்ரீ ரஸாருடின் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட பெண்ணை அமைச்சரின் மகன், திருமணம் செய்து கொண்டதாக போலீசாரின் பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் திருமண சான்றிதழுக்காக தாங்கள் காத்திருப்பதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

வயிற்றில் வளரும் 7 வாரக்குழந்தைக்கு தந்தையாக பொறுப்பேற்கும்படி கூறியப் பெண்ணை, அமைச்சர் ஒருவரின் மகன் மிரட்டி, அச்சுறுத்தியதாக கூறப்படும் செய்தி அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்