ஜன.11-
கெடா, அலோர் ஸ்டாரில் காணாமல் போன ஏழு வயது ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவன், Firash Daniel Muhammad Hafeez Ansle, கெடா ஆற்றில் மூழ்கி இறந்து கிடந்தான். சிறுவனின் தாய் பிற்பகல் 4.30 மணிக்கு அவனை காணவில்லை என்று உணர்ந்ததை அடுத்து, மாலை 5.40 மணிக்கு காவல் துறையில் புகார் அளித்ததாக KOTA SETAR மாவட்டக் காவல் துறைத் தலைவர் Siti Nor Salawati Saad தெரிவித்தார்.
30 காவல் துறை அதிகாரிகளைக் கொண்டு தேடுதல் பணியை மேற்கொண்டனர். இன்று காலை சிறுவனின் வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள ஆற்றங்கரையில் அவனது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த வழக்கு திடீர் மரணமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.