ஜன.9-
இந்தோனேசிய அதிபர் Prabowo Subianto மலேசியாவிற்கு இன்று அலுவல் பயணத்தை மேற்கொள்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேசிய அதிபராக பதவியேற்றப் பின்னர் Prabowo Subianto, மலேசியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது அதிகாரத்துவ வருகை இதுவாகும்.
மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் Prabowo Subianto-வின் இந்த வருகை அமையவிருக்கிறது என்று வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்திக்கவிருக்கு Prabowo Subianto, பொருளாதாரம், சமூகவியல் கலாச்சாரம், தற்காப்பு மற்றும் பாதுகாப்பு உட்பட பல முக்கிய விவகாரங்களில் மலேசியாவும், இந்தோனேசியாவும் ஒத்துழைப்பு கொள்வது விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.