சிரம்பான்,செப்டம்பர் 05-
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி சனிக்கிழமை இரவு மணி 8.00 க்கு சிரம்பான், துவாங்கு ஜாபர் – ரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் திருமுறை அருளாசி உரை நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு, திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீமத் சிவாக்கர தேசிய சுவாமிகள் அவர்கள், சிறப்பு வருகை புரிந்து, திருமுறை அருளாசி உரை நிகழ்த்தவிருக்கிறார்.
நேற்று மலேசியா வந்து சேர்ந்த அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிய சுவாமிகள், இன்று காலையில் ஆலயத்திற்கு வருகை புரிந்து, நிகழ்விற்கான ஏற்பாடுகளை நேரில் கண்டறிந்தார். ஏற்பாடுகள் குறித்து ஆலய நிர்வாகத்தினர், சுவாமிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு தொடங்கும் சுவாமிகளின் அருளாசி உரை நிகழ்விலும், அதற்கு முன்னதாக மாலை 6 மணிக்கு நடைபெறும் நிந்திய பூஜை மற்றும் விஷேச பூஜைகளிலும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, மெய்ப்பொருளின் தெளிவுரையையும், அருளாசியையும் பெற்று இன்புறுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.