சிரம்பான் ,செப்டம்பர் 18-
சிரம்பான், துவாங்கு ஜாபர் – ரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் சமயத் கொண்டு அங்கீகார நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆலய விழாக்களில் சமயம் தொடர்பான படைப்புகளைப் படைத்த மாணவர்கள், / மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்கள், / சங்கு படை அன்பர்கள்,/ ஆலயத்தின் சமயப் பணியாளர்கள் என அனைவரின் சமயச்சேவையைப் பாராட்டி நற்சான்றிதழ்களும் நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன.
அனைவருக்கும் தமிழ்நாடு, திருகயிலாய பரம்பரை ஶ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோவில் ஆதீன ஶ்ரீகார்யம் வாமதேவ ஶ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் அவர்கள் முன்னிலையில் இந்த சிறப்புகள் செய்யப்பட்டன. அத்துடன் அவரின் திருக்கரங்களால் சான்றிதழ்களையும் நினைவுச்சின்னங்களையும் வழங்கி ஆசிர்வதித்தார். அனைவரின் சேவையும் மேன்மேலும் தொடர ஈசன் அருள் கிட்டட்டும் என்று சுவாமிகள் வாழ்த்துரை வழங்கினார்.
ஆலயத்தின் பிரதான குருக்களான யாழ்பாணம், தெல்லிப்பாளையைச் சேர்ந்த சிவாச்சாரியார் சிவஸ்ரீ புவிதர்ஷன் குருக்களின் பணியும் இவ்விழாவிற்கு சிறப்பு சேர்த்துள்ளதாக சுவாமிகள் குறிப்பிட்டார்.
புவிதர்ஷன் குருக்களின் ஊக்குவிப்பு, அவருடைய அலோசனை மற்றும் அனுசரணை மூலமாக நமது பிள்ளைகள் மாங்கனி திருவிழா, திருமுறை திருவிழா, பிட்டுக்கு மண் சுமந்த பெருவிழா என பத்து நாட்களுக்கு நடைபெற்ற இவ்விழாவில் மிகச் சிறப்பான பங்கேற்பபை வழங்கினர் என்று சுவாமிகள் புகழாரம் சூட்டினார்.
Caption
ஶ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள்