ஜன.9-
பள்ளியில் நடத்தப்பட்ட கண்காட்சி நிகழ்வில் 12 வயது இரு மாணவிகளை மானபங்கம் செய்ததாக கூறப்படும் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
43 வயதுடைய அந்த ஆசிரியர், இன்று மலாக்கா ஆயர் குரோ நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் நோர் சலியாத்தி முகமட் சோப்ரி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவரை தடுத்து வைப்பதற்கான அனுமதியை போலீசார் பெற்றனர்.
தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து அந்த இரு மாணவிகளும் பயத்தால் அழுத வண்ணம், பள்ளி தலைமையாசிரியரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து இவ்விவகாரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டதாக மலாக்கா மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ முகமட் நஸ்ரி ஜவாவி தெரிவித்தார்.