சீனாவின் திபெத் பகுதியில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. எவரெஸ்ட் மலைக்கு அருகில் மையம் கொண்டிருந்ததால், இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், காயமடைந்தும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தும் தவிக்கின்றனர். புவியியல் பிளவு கோட்டில் திபெத் அமைந்திருப்பதால், அங்கு நிலநடுக்கம் ஏற்படுவது இயல்பே. ஆனால், இந்த முறை ஏற்பட்ட நிலநடுக்கம் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடும் குளிராலும், கடினமான பாதைகளாலும் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பேரிடர், இயற்கை சீற்றங்களின் போது மாந்தநேய உதவியையும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல்வேறு தரப்பினரும் முன்வர வேண்டும். இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளித்து, உலகளாவிய மாந்தநேயத்தை வலுப்படுத்த வேண்டும் என்று டாக்டர் RA லிங்கேஸ்வரன் ஆர்.அருணாசலம் கேட்டுக்கொண்டுள்ளார்.