எஸ்.பி.எம். வரலாற்று வினாத் தாள், தேர்வுக்கு முன்னதாகவே கசிந்து விட்டதா? கல்வி அமைச்சு மறுப்பு

ஜன.9-

தற்போது எஸ்.பி.எம். தேர்வு நடைபெற்றுகொண்டு இருக்கும் வேளையில் அதன் வரலாற்று வினாத்தாள், தேர்வுக்கு முன்னதாகவே கசிந்து விட்டதாக கூறப்படுவதை கல்வி அமைச்சு இன்று வன்மையாக மறுத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை, அடிப்படையில்லை என்று கல்வி அமைச்சு விளக்கம் தந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட அந்த தகவலானது, ஏற்கனவே வரலாற்றுப்புத்தகங்களில் உள்ள ஆருடம் அடிப்படையிலான யூக கேள்விகளே தவிர அது தேர்வுக்குரிய கேள்விகள் அல்ல என்று கல்வி அமைச்சு தெளிவுப்படுத்தியுள்ளது.

2024 ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வின் வரலாற்று வினாத் தாள் 1 மற்றும் 2 ஆகியவை தேர்வுக்கு முன் வெளியாகவில்லை என்பதை இதன் வழி கல்வி அமைச்சு உறுதிப்படுத்துவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்