கண்ணதாசனின் மறுபக்கம் நூல் வெளியீட்டு விழா

ஜன.9-

முனைவர் கவிஞர் இரவிபாரதியின் கண்ணதாசனின் மறுபக்கம் எனும் நூல் வெளியீட்டு விழா, நேற்று மாலையில் கோலாலம்பூர் டான்ஸ்ரீ கே.ஆர். சோம அரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இலக்கிய ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா. சகாதேவன், எழுத்தாண்மை ஏந்தல் பெரு.அ. தமிழ்மணி, டத்தோ கு. செல்வராஜு, டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான பெ. இராஜேந்திரன், ஞானசைமன், டாக்டர் ஞானபாஸ்கரன், பேராசிரியர் டத்தோ டாக்டர் என்.எஸ். ராஜேந்திரன், கரு.கார்த்திக் உட்பட முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்விற்கு சிகரம் வைத்தாப்போல் “ கண்ணதாசனைப் பற்றி..,” என்ற தலைப்பில் கண்ணதாசனின் தீவிர பற்றாளரும், இலக்கியப் பேச்சாளரும், மகப்பேறு மருத்துவ நிபுணருமான டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன் ஆற்றிய சிறப்புரை பலரின் கவன ஈர்ப்பாக அமைந்தது.

பலரின் மறுபக்கம் மறைவான ஒன்று . ஆனால் கண்ணதாசனின் மறுபக்கம் அப்பட்டமான ஒன்று. ஒளிவு மறைவு இல்லாத , ஆறடி வளர்ந்த அப்பாவித்தனம் கண்ணதாசன் .
உள்ளூர் பேருந்தில் உலக அழகியைக் காட்டியவன் கண்ணதாசன் . சாதாரண கறுப்பு வெள்ளை சினிமாவில் கற்கண்டுக் காவியங்களைத் தந்தவன் என்று டாக்டர் ஜெயபாலன் தமக்கே உரிய பாணியில் இலக்கிய உரை நிகழ்த்தினார்.

முன்னதாக, நூலாசிரியர் கவிஞர் இரவிபாரதிக்கு டத்தோஸ்ரீ எம். சரவணன் பொன்னாடைப் போர்த்தி சிறப்பு செய்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்