காரின் பூத்தில் பிணம்: ஆடவர் மீது கொலை குற்றச்சாட்டு

லோரி ஓட்டுநர் ஒருவரை கொலை செய்து, சடலத்தை காரின் பூத்தில் மறைத்து வைத்து விட்டு சென்றதாக லோரி ஓட்டுநர் ஒருவர் இன்று மெர்சிங், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

36 வயது ஹஸ்புல்லா அடாம் என்ற அந்த லோரி ஓட்டுநர். மாஜிஸ்திரேட் நூர்கலிடா பர்ஹானா அபு பாக்கார் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

மரணத் தண்டனை அல்லது 40 வருட சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த லோரி ஓட்டுநருக்கு எதிரான வழக்கு, உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் இன்று அவரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்