புத்ராஜெயா, டிச.5-
புத்ராஜெயாவில் கட்டடம் ஒன்றுக்கு சாயம் பூசும் பணியின் போது, பாரந்தூக்கி கிரேன் ஒன்று எதிர்பாராத விதமாக குடை சாய்ந்ததில் அந்த பாரந்தூக்கியில் நின்றுகொண்டு சாயம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் இருவர் கடும் காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் இன்று காலையில் புத்ராஜெயா, பிரிசிண்ட் 8 இல் உள்ள கட்டடம் ஒன்றில் நிகழ்ந்தது. பாரந்தூக்கி கிரேனில் மூன்று பணியாளர்கள் இருந்ததாகவும், இதில் இருவர் உயிரிழந்த வேளையில் மற்றொருவர் கடும் காயங்களுக்கு ஆளாகியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தோனேசியர்களான இரு தொழிலாளர்களும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி, சம்பவ இடத்திலேயே மாண்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் பிற்பகல் ஒன்றில் தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக போலீசார் தெரிவித்தனர்