நட்சத்திர தம்பதிகளான உமா – ரியாஸ் கானின் மகன் ஷாரிக் ஹாசன் தன்னுடைய மனைவி மரியாவோடு முதல் முறையாக கொடுத்துள்ள பேட்டி, தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காததால், குணச்சித்திர நடிகையாக மாறியவர் உமா. இவர் பிரபல இசையமைப்பாளர் காமேஷ் மற்றும் நடிகை கமலா காமேஷின் மகள் ஆவார். அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தையாக நடித்த இவர், பின்னர் ‘அன்பே சிவம்’ படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து கனவு மெய்ப்பட வேண்டும், மௌனகுரு, அம்புலி, மரியான், பிரியாணி, பூங்காவனம், உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் .தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கயல்’ சீரியலில் சிவசங்கரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இளம் வயதிலேயே, பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷாரிக் ஹாசன் என்கிற மகனும், சமர்த் ஹாசன் என்கிற மகனும் உள்ளனர்.
ஷாரிக் பென்சில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிலையில், அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாததால், திரைப்பட வாய்ப்புக்காக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார்.
பின்னர் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் அனிதா சம்பத்துடன் நடனமாடி, டைட்டில் பட்டதை வென்றார். தற்போது சில படங்களில் ஹீரோவாக நடித்து வரும் ஷாரிக் மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது.
இவர்களின் திருமணத்தில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதேபோல் இரு வீட்டு குடும்பத்தினரும் கலந்து கொண்டு இவர்களின் திருமணத்தை சிறப்பித்தனர். ஷாரிக் காதலித்த மரியா ஜெனிஃபர், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவர்களின் திருமணம் கிறிஸ்தவ முறைப்படியும், இந்து முறைப்படியும் நடந்தது.
மரியாவை, ஷாரிக் காதலித்து திருமணம் செய்து கொண்ட தகவல் அனைவருக்கும் தெரியும் என்றாலும், மரியா ஏற்கனவே திருமணம் ஆகி இவருக்கு பத்து வயதில் மகள் ஒருவர் இருக்கிறார் என்ற தகவல் யாரும் அறியாத விஷயமே.இதை தற்போது ரெட் நூல் youtube சேனலில் வெளிப்படையாக மரியா கூறியுள்ளார்.
இந்த பேட்டியில் பேசியுள்ள மரியா, “ஒரு சிங்கிள் மதராக தான் தன்னுடைய மகளை கஷ்டப்பட்டு வளர்த்து வந்தேன். எனவே தன்னுடைய மகளை தவிர, வேறு எதுவும் எனக்கு முக்கியமானதாக தெரியவில்லை. குறிப்பாக இரண்டாம் திருமணம் குறித்து எப்போதுமே நான் யோசித்ததே இல்லை. காரணம் என்னை ஏற்றுக் கொள்பவர்கள், என்னுடைய மகளை ஏற்றுக் கொள்வார்களா? என்பது சந்தேகமே.
ஆனால் ஷாரிக் என் மகளையும் நன்றாக பார்த்துக் கொண்டார். இதுதான் அவர் மீது எனக்கு காதல் வர காரணமாக அமைந்தது. இருந்தாலும் அவரின் பெற்றோர் குழந்தையோடு என்னை ஏற்றுக் கொள்வார்களா? என்கிற பயம் எனக்குள் இருந்தது. ஆனால் ஐராவை என்னுடைய ஆன்ட்டி – அங்கிள் அவர்களின் பேத்தியாகவே பார்க்க துவங்கி விட்டனர். அங்கிள் – ஆண்ட்டி ஷாப்பிங் போனால் அவளையும் கூட அழைத்து தான் செல்வார்கள். ஷூட்டிங்கில் இருந்தால் கூட ஐரா ஸ்கூலுக்கு போயிட்டாளா? வந்துட்டாளா என்று அங்கிள் அக்கறையாக விசாரிப்பார்.