சிரியாவில் உள்ள அமெரிக்க தளம் மீது ஏவுகணை தாக்குதல்

Syria Deir Ezzurz மாகாணத்தில் உள்ள “Al-Omar” எண்ணெய் வயலில் அமைந்துள்ள US இராணுவ தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அல்-மயாதீன் செய்திச் சேவை, எதிர்ப்புக் குழுக்கள் பல ஏவுகணைகள் மூலம் உமர் எண்ணெய் வயல்களில் உள்ள அமெரிக்க தளத்தை குறிவைத்ததாக தெரிவித்தது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தத் தளத்தின் உள்ளே இருந்து வானத்தில் புகைமூட்டம் எழுந்ததாக அல்-மயாதீன் மேலும் தெரிவித்தது.

ஒமர் எண்ணெய் வயல் தளம் சிரியாவில் அமெரிக்க ஆக்கிரமிப்பின் மிகப்பெரிய இராணுவ தளமாகும். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்