சிறப்பாக நடைபெற்றது RRI தோட்ட தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம்

சுங்கை பூலோ, மே 27-

சுங்கை பூலோ, தேசிய வகை R.R.I. தோட்ட தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் 40 ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

இந்த ஆண்டுக்கூட்டத்தில் திருநாவுக்கரசு வத்துமலை தலைமையிலான நடப்பு பொறுப்பாளர்கள் வெற்றி பெற்றனர். திருநாவுக்கரசுக்கு 141 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட் சண்முக சுந்தரத்திற்கு 21 வாக்குகளும் கிடைத்தன.

கடந்த மே 19 ஆம் தேதி நடந்த பள்ளியின் 6 ஏக்கர் நில சம்பந்தப்பட்ட விளக்கமளிப்புக் கூட்டத்தில் மக்கள் வழங்கிய ஆதரவின் பிரதிபலிப்பே இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மாநில தலைமையாசிரியர் மன்றத்தலைவர் S.S. பாண்டியன் சிறப்பு பிரமுகராக இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

பள்ளி தலைமையாசிரியர் கி. புஷ்பராணி, தமதுரையில் பள்ளி கட்டிடத்தின் தற்போதைய நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவும் பாதுகாப்பற்றதாகவும் உள்ளதாக தெரிவித்தார்.

கழிப்பறை பற்றாக்குறை, சிறிய அளவிலான வகுப்பறை மற்றும் மேலும் பல குறைபாடுகளை புஷ்பராணி, சுட்டிக்காட்டினார்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு மற்றும் துணைத்தலைவர் மாதவன் ஆகிய இருவரும் இவ்வாண்டு தங்கள் செயலவை ஆதரவில் பள்ளியில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளை தொகுத்து பெற்றோர்களுக்கு விளக்கமளித்தனர்.

இப்பள்ளியில் கடந்த பத்தாண்டுகளாக மாணவர் நலன் பொறுப்பாசிரியராக பதவி வகித்து வரும் திருமதி.உமாதேவி, வரும் ஆகஸ்ட் மாதம் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு பெற்றோர்களிடம் சில கருத்துகள் மற்றும் நன்றி தெரிவிக்கும் வகையில் உரையாற்றினார்.

ஏறக்குறைய 10 மாதங்களில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் இவ்வளவு நிகழ்ச்சிகளை நடத்தியிருப்பது பாராட்டுகுரியது என்றார் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட . S.S.Pandian புகழாரம் சூட்டினார்.

பள்ளி வளர்ச்சிக்காக PIBG,LPS மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து செயலாற்றுதல் மிக முக்கியம் என்பதையும் பாண்டியன் தமது உரையில் வலியுறுத்தினார்.

ஷா ஆலம் மாநகர் மன்றம், வழங்கியிருக்கும் மாற்று நிலத்தில் தான் புதிய பள்ளிக்கூடம் கட்டப்பட வேண்டும். திருநாவுக்கரசு, துணைத்தலைவர் மாதவன் செயலவை உறுப்பினர் தினகரன் ஆகிய மூவரும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளாக பள்ளி மேலாளர் வாரியத்தில் இடம்பெற வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

162 பெற்றோர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் RRI தோட்ட இளைஞர்கள் பள்ளி வளர்ச்சிக்காக 20 ஆயிரம் வெள்ளிக்கான காசோலையை பள்ளியின் தலைமையாசிரியர் புஷ்பராணியிடம் ஒப்படைத்தனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்