சிவகார்த்திகேயனை பாக்ஸ் ஆபிஸ் பாகுபலியாக மாற்றிய அமரன்! 4 நாட்களில் இம்புட்டு வசூலா?

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து தீபாவளிக்கு திரைக்கு வந்த அமரன் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்துள்ள படம் அமரன். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள முதல் படம் இதுவாகும். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். இவர் இதற்கு முன்னர் ரங்கூன் படத்தை இயக்கி இருந்தார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியின் இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.

அமரன் திரைப்படம் முன்னாள் ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும், அவரின் மனைவி இந்து ரெபேகா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். அமரன் திரைப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு வருகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்