சைவ சமயக் கல்லூரிக்கான கட்டுமானப் பணி விரைவில் தொடங்கும்

கெர்லிங் , ஆகஸ்ட் 20-

மலேசிய சைவ சமயப் பேரவையும் சைவத் திருக்கோயில் கலைக் கல்வி அறவாரியமும் இணைந்து மலேசிய இந்து சங்கத்தின் ஆதரவுடன் செயல்படித்திவரும் சைவத் திருக்கோயில் சைவ சமயக் கல்லூரிக்கான திட்டத்தின் அடிக்கல்நாட்டு விழா நேற்று பிற்பகல் மணி 2.30 க்கு சைவ ஆகமங்கள் நெறிகளின்படி திருமுறை ஓதப்பட்டு நடைபெற்றது.

கெர்லிங் பட்டணத்தின் அருகே, தஞ்சோங் மாலிம் செல்லும் வழியில் உள்ள நிலம் ஒன்றில் நடைபெற்ற அந்த அடிக்கல்நாட்டு விழாவிற்கு, ஒன்பது பேர் கொண்ட அறங்காவலர் குழு, அறவாரிய உறுப்பினர் நூறு பேர் நானூறு சித்தாந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் வருகை தந்துள்ளனர்.

மனை சீரமைப்பு பணிகளும் கட்டுமானப் பணிகளும் விரைவில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஐம்பது மில்லியன் பெருமானமுள்ள இந்த திட்டத்தின் முதற் பகுதியில் சிவன் கோயில், திருமண மண்டபம், தியான மண்டபம், பணியாளர் குடியிருப்பு ஆகியவை நிர்மாணிக்கப்படும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கட்டப்படும் அந்த சமய கல்லூரியில் சமய ஆசிரியர் , கோயில் பூசகர், திருமுறை ஓதுவார், தென்னிந்திய சமயங்களின் தத்துவத்துறைகள் போன்ற அனைத்து துறைகளுக்கான பயிற்சிகளும் கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாபெறும் திட்டத்திற்காக நன்கொடை வழங்க விரும்புவர்கள் PUBLIC BANK, YAYASAN FALSAFAH DAN INSTITUSI SAIVA என்ற வங்க கணக்கின் 3208616019 என்ற வங்கி எண்ணின் வழி வழங்கலாம்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்