ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டல ஒப்பந்தம் மிகப்பெரிய பலனை தர வல்லதாகும்

ஜன.8-

ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டல ஒப்பந்தம் கையெழுத்தானது, மிகப்பெரிய பலனை தர வல்லதாகும் என்று ஜோகூர் மந்திரி பெசார் Datuk Onn Hafiz Ghazi தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜோகூருக்கும், அதன் மக்களுக்கும் பெரும் அனுகூலத்தை ஏற்படுத்தக்கூடியதாகும் என்று மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

மலேசியாவிற்கு வருகை புரிந்த சிங்கப்பூருர் பிரதமர் லாரான்ஸ் வோங் மற்றும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் மீதான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

புதிய சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் மூலம் இரு நாட்டு மக்களுக்கும், வர்ததகமும், புதிய வேலைகளும், இதர கூடுதல் வாய்ப்புகளும் உருவாகும் என்றார் அவர்.

தவிர மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று மந்திரி பெசார் Datuk Onn Hafiz Ghazi தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்