தனது அறிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்

டிச. 29-

2018 இல் PKR தலைவர் அன்வர் இப்ராஹிமுக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை கேள்விக்குட்படுத்தும் அறிக்கைகளை Umno இளைஞர் தலைவர் Dr Akmal Saleh வெளியிடுவது, மாமன்னரின் அதிகாரத்தை அவமதிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். மடானி அரசாங்கம் கடந்தகால மோதல்களுக்காக பழிவாங்கும் அரசியலைப் பின்பற்றவில்லை என்றும், பல்வேறு கட்சிகளின் கூட்டாட்சி அரசாங்கத்திற்கு அவரவர் “விருப்பங்கள்” உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்கிறது என்றும் PKR இளைஞர் தலைவர் Adam Adli Abd Halim கூறினார்.

அன்வருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பு அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவு அல்ல என்றும், அது அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட முறையான வழிமுறைகளைப் பின்பற்றியே வழங்கப்பட்டது என்றும் Adam Adli வலியுறுத்தினார்.

நஜிப் மீதான வழக்கும் தண்டனையும் டாக்டர் மஹாதீர், இஸ்மாயில் சப்ரி ஆட்சிக் காலத்தில் நடந்தது என்றும், தற்போது அன்வர் இப்ராஹிமின் நிர்வாகத்தை தாக்குவது முறையற்றது என்றும் Adam குறிப்பிட்டார்.

Dr Akmal Salehஇன் அறிக்கைகள் ஆதாரமற்றவை என்றும், அரசாங்கம் அமைப்பையும் சட்டத்தையும் அவமதிப்பதாகவும் Adam கூறினார். எனவே, அவர் தனது அறிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்