தவறு நடந்து விட்டதை நஜீப் ஒப்பினார்

கோலாலம்பூர், ஜன.8-


உயர்ந்தக் கல்வி மற்றும் உலக அரசியல் நடப்புகள் குறித்து பரந்த அனுபத்தையும் தெளிவையும் தாம் கொண்டிருப்பதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இத்தகைய பரந்த அனுபவத்தையும், தெளிவையும் தாம் கொண்டு இருந்த போதிலும் தவறான தகவலினால் அல்லது தவறான ஆலோசனைகளால் தவறு செய்து விட்டதை நஜீப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

நஜீப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 1எம்.டி.பி. வழக்கு விசாரணையில் தமது தற்காப்பு வாதத்தின் போது, தாம் செய்த தவற்றை ஒப்புக்கொண்டார்.

அதேவேளையில் நாட்டை வழிநடத்தக்கூடிய பிரதமர் பொறுப்பில் தாம் அமர்ந்திருந்த நிலையில் நாட்டின் நிர்வாகம் தொடர்புடைய முடிவுகளை தாம் ஒருவரே எடுப்பதில்லை என்றும் அது கூட்டு முடிவாகும் என்றும் நஜீப் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்