திருமணமாகி குழந்தை இருக்கும் நடிகரை திருமணம் செய்தாரா கல்யாணி பிரியதர்ஷன்? வைரல் வீடியோ..!

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஏற்கனவே திருமணமாகி, குழந்தை இருக்கும் ஒரு நடிகரை திருமணம் செய்து கொண்டதாக இணையதளங்களில் வைரலாகி வரும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மலையாள திரையுலகின் பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி தம்பதிகளின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் என்பதும், இவர் தமிழில் ’ஹீரோ’, ’மாநாடு’ உள்ளிட்ட படங்களிலும், மலையாளத்தில் ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார். தற்போதும் இவர் தென்னிந்திய படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகர் ஸ்ரீராமை கல்யாணி பிரியதர்ஷன் திருமணம் செய்து கொண்டது போன்ற ஒரு வீடியோ ஸ்ரீராமின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ஏற்கனவே திருமணமாகி, குழந்தை இருக்கும் நடிகர் ஸ்ரீராமை கல்யாணி பிரியதர்ஷன் திருமணம் செய்து கொண்டாரா என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர். இந்த வீடியோவில் வேறு எந்த விவரங்களும் இல்லாததை அடுத்து, ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது இந்த வீடியோ ஒரு விளம்பரப் படத்திற்காக எடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்தே ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இப்படி ஒரு வீடியோவை நடிகர் ஸ்ரீராம் எந்தவிதமான குறிப்புகளும் இல்லாமல் பதிவு செய்துள்ளதை, ரசிகர்கள் கண்டித்தும் வருகின்றனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்