ஜன.7-
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுப்பதற்கு துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் தாக்கல் செய்த விண்ணப்பத்திற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி கோலாலம்பூர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் துன் மகாதீர் செய்தியாளர்களுக்கு வெளியிட்ட ஆவணங்கள் தொடர்பில் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுப்பதற்கு நீதித்துறை ஆணையர் gan Techiong அனுமதி அளித்தார்.
துன் மகாதீரின் பூர்வீகம் கேரளா என்றும், அவரின் உண்மையான பெயர் இஸ்கண்டார் குட்டி என்றும் அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் வெளியியிட்ட அறிக்கை தொடர்பில் அவருக்கு எதிராக துன் மகாதீர் அவதூறு வழக்கை தொடுத்தள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தப்பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில் துன் மகாதீர், தனது உண்மையான பெயர் தொடர்பான சில ஆ வணங்களை பொதுவில் அம்பலப்படுத்தியிருந்தார்.
வழக்கின் முக்கிய ஆவணங்களை துன் மகாதீர் பொதுவில் அம்பலப்படுத்தியிருப்பது மூலம் அவர் நீதிமன்ற அவமதிப்பை செய்துள்ளார் என்று அகமட் ஜாஹிட் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்துள்ளார்.