நஜிப் ரசாக்கிற்கு ஆதரவாக PAS நடத்திய பேரணியை கடுமையாக விமர்சித்தார்

ஜன.11-

பெர்சத்து கட்சியிலிருந்தும், பெரிக்காத்தான் நேஷனலின் கூட்டரசுப் பிரதேச செயலாளர் பதவியிலிருந்தும் Mahathir Rais உடனடியாக விலகியுள்ளார். கட்சியின் தலைவர் ராட்ஸி ஜிடினுக்கு அனுப்பிய கடிதத்தில் தனது பதவி விலகலை அறிவித்த அவர், அதஏகானக் காரணத்தை வெளிப்படையாகக் கூறவில்லை. இருப்பினும், தனது போராட்டம் கட்சியின் தற்போதைய கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை என்பதே இந்த விலகலுக்கானக் காரணம் என்று பின்னர் தெரிவித்தார்.

நஜிப் ரசாக்கிற்கு ஆதரவாக PAS நடத்திய பேரணியை மகாதீர் கடுமையாக விமர்சித்தார். அரசியல் ஆதாயங்களுக்காக பெரிக்காத்தான் நேஷனல் தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்கத் தயாராக உள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். எதிர்வரும் ஜனவரி 22-ஆம் தேதி உம்ரா பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அதன் பிறகு தனது அரசியல் எதிர்காலம் குறித்து முடிவெடுப்பேன் என்றும் Mahathir Rais தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்