பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட 6 ஏக்கர் நிலத்தை மக்கள் பார்வையிட்டனர்

சுங்கை பூலோ, மே 23-

சுங்கை பூலோ, RRI தோட்டத் தமிழ்ப்பள்ளியை இடம் மாற்றம் செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள 6 ஏக்கர் நிலத்தை பள்ளியின் பெற்றோர்கள், முன்னாள் மாணவர் சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் RRI தோட்ட முன்னாள் மண்ணின் மைந்தர்கள் நேற்று பார்வையிட்டனர்.

RRI தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மேலாளர் வாரியத்தின் தலைவர் முனுசாமி மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் செந்தில்நாதன் ஆகியோரால் அந்த 6 ஏக்கர் நிலம் வேண்டாம் என்று கூறி, சிலாங்கூர் கல்வி இலாகாவிற்கு கடிதம் எழுதப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு அடிப்படை வசதிகள் உருவாகவிருக்கும் அந்த 6 ஏக்கர் நிலத்தை தற்காக்கும் போராட்டத்தில் RRI தோட்ட முன்னாள் மண்ணின் மைந்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது RRI தோட்ட தமிழ்ப்பள்ளி வீற்றிருக்கும் இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தூரத்தில் அந்த 6 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. 5 முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களை அடிப்படையாக கொண்டு மொத்தம் 535 ஏக்கர் நிலப்பகுதியை , Kwasa Land Sdn. Bhd. என்ற நிறுவனம் தற்போது மேம்படுத்தி வருகிறது..

பள்ளியின் புதிய கட்டடம் நிர்மாணிக்கப்படவிருக்கும் நிலப்பகுதிக்கு அருகாமைமையிலேயே LRT ரயில் நிலையம் உள்ளது. தொழிலாளர் சேமநிதி வாரியமான EPF தலைமையகம், இடைநிலைப்பள்ளி உட்பட்ட பலதரப்பட்ட வசதிகளை கொண்ட மேம்பாடுகளை Kwasa Land Sdn. Bhd. நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

RRI தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு வழங்கப்பட்ட இந்த 6 ஏக்கர் நிலம் கைநழுவிவிடக்கூடாது என்பதற்காக அதனை தற்காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மண்ணின் மைந்தர்கள், / பள்ளி பெற்றோர்கள் அந்த புதிய நிலப்பகுதியை பார்வையிடுவதற்கு ஒவ்வொரு குழுவினராக நேற்று அழைத்து செல்லப்பட்டனர்.
படவிளக்கம்

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்