பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு கால்பந்து வழங்கப்பட்டது”

பினாங்கு ,அக்டோபர் 19-

பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு கால்பந்து வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தலைமையில் மலேசிய கால்பந்து லீக்,பினாங்கு FC Sdn. Bhd. மற்றும் ஷெகினாPR Sdn. Bhd. ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் FIFA உலகத் தரம் வாய்ந்த சிறப்பு கிரேட்டிற்குரிய தலா 350 வெள்ளி மதிப்பிலான 200 கால்பந்துகள் ஒப்படைக்கப்பட்டன.

தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே விளையாட்டுத்துறையை உக்குவிக்கும் நோக்கில் தனது சமூக கடப்பாடுகளில் ஒன்றாக RSN ராயர் மற்றும் Dr. லிங்கேஸ்வரன் தலைமையிலான பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இந்நிகழ்வை முன்னெடுத்தது.

இதுபோன்ற நிகழ்வு மாணவர்கள் மத்தியில் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் என்பதுடன் அவர்கள் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கவும், தங்களின் திறனை வளர்த்துக்கொள்ளவும் உதவும் என்று இந்நிகழ்வில் உரையாற்றிய பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் டாக்டர் R. லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளிகளுக்கு கால்பந்துகளை ஒப்படைக்கும் இந்த நிகழ்வில் டிஏபி தலைவரும் ,Bagan நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங், ஷெக்கினா PR நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி கிறிஸ்டோபர் ராஜ் , பினாங்கு அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயர், அறவாரியத்தின் ஆணையர் குமரன் கிருஷ்ணன் பினாங்கு FC குழுவின் நிர்வாகி ஜெஃப்ரி செவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தவிர பள்ளிப்பொறுப்பாளர்கள் பெற்றோர்கள் என அதிகமானோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்