ஜன.9-
கோலாலம்பூரில் உள்ள கணினி மய வாகனப் பரிசோதனை மையத்தில் சோதனைக்கு உட்படுத்தும் கனரக வாகனங்களை அங்கீகரிப்பதில் மிகப்பெரிய ஊழல் நடந்து இருப்பதாக கூறப்படும் நிலையில் இதன் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 பேராக உயர்ந்துள்ளது.
அந்த மையத்தின் இயக்குநர் உட்பட ஆறு அதிகாரிகள் மற்றும் ஒரு ஏஜெண்டு ஆகியோர் ஏற்கனவே மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆகக்கடைசியாக அந்த அரசாங்க ஏஜென்சியின் வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வந்த மேலும் 13 அதிகாரிகளை SPRM கைது செய்துள்ளது. 20 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 13 அதிகாரிகளும் நேற்று புத்ராஜெயா, SPRM தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனரக வாகன பரிசோதனைக்கு உட்படும் ஒவ்வொரு வாகனத்தையும் அங்கீகரிப்பதில் ஒவ்வொருவரும் மாதத்திற்கு 150 ரிங்கிட் முதல் 1,500 ரிங்கிட் வரை லஞ்சம் வாங்கியதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.