ஜன.11-
ஶ்ரீ மஞ்சோங்கில் உரிமம் இல்லாமல் கட்டுப்பாட்டு பொருட்களை வைத்திருந்த ஒரு உறைந்த உணவு வணிக இடத்தை பேரா மாநில உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு முற்றுகையிட்டது. பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சோதனையில் சர்க்கரை, கோதுமை மாவு, ஒரு கிலோ பேக்கேட்சமையல் எண்ணெய் உள்ளிட்ட கட்டுப்பாட்டு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக பேரா மாநில இயக்குநர் Datuk Kamalludin Ismail தெரிவித்தார்.
கடை உரிமையாளர் கட்டுப்பாட்டு பொருட்கள் வியாபாரம் செய்வதற்கான முறையான உரிமம் வைத்திருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 4 ஆயிரத்து 703 ரிங்கிட் 27 சென் ஆகும். உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் Kamalludin மேலும் சொன்னார்.