பொது மன்னிப்பு வாரியத்தின் கூட்டக் குறிப்பு வெளியிடப்படாது

ஜன.9-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக், வீட்டுக்காவலில் வைப்பது தொடர்பாக அரசாணை உத்தரவு ஒன்று இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் பொது மன்னிப்பு வாரியத்தின் கூட்டக்குறிப்பு வெளியிடப்படாது என்று கூட்டரசுப் பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சலேஹா முஸ்தாபா தெரிவித்தார்.

நஜிப் விவகாரத்தை விவாதித்ததாக கூறப்படும் மன்னிப்பு வாரியத்தின் கூட்டக் குறிப்பை அம்பலப்படுத்த இயலாது அமைச்சர் விளக்கினார்.

அந்த கூட்டக்குறிப்பு மிக ரகசியமானது என்று சலேஹா திட்டவட்டமாக தெரிவித்தார்.

மன்னிப்பு வாரியத்தில் ஓர் உறுப்பினர் என்று நம்பப்படும் சலேஹாவை மேற்கோள்காட்டி, நஜீப்பிற்கு பொது மன்னிப்பு கிடைத்து விட்டதாக கடந்த ஆண்டு வெளியிட்ட செய்தி, ஓன் லைன் ஊடகங்கள் அடுத்த சில நிமிடங்களியே அந்த செய்தியை மீட்டுக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்