மடானி அரசாங்கத்தின் ஒருமைப்பாட்டையும் கேள்விக்குறியாக்குகிறது

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கான வீட்டுக்காவல் உத்தரவை அமைச்சர் Dr. Zaliha Mustafa மறைத்து வைத்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை கடுமையாக கண்டித்துள்ளார் டி.ஏ.பி. கட்சியைச் சேர்ந்த கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் Lim Lip Eng. இது அமைச்சர் Dr. Zalihaவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பது மட்டுமல்லாமல், மடானி அரசாங்கத்தின் ஒருமைப்பாட்டையும் கேள்விக்குறியாக்குகிறது என்று அவர் கூறினார். இந்த அவதூறு பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தில் உண்மையை நிலைநாட்ட, மன்னிப்பு வாரியத்தின் செயலகமான பிரதமர் அலுவலகத்தின் சட்ட விவகாரப் பிரிவான BHEUU நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க அழைக்கலாம் என்று Lim Lip Eng பரிந்துரைத்தார். இதன் மூலம், இஸ்தானா நெகாராவிடமிருந்து எந்தவொரு கூடுதல் உத்தரவும் BHEUU பெறவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும். நீதிமன்றத்தின் முடிவே இந்த விவகாரத்தில் இறுதியானதாக இருக்கும் என்றும், தேவையற்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்