மறு ஆய்வு செய்வதால் மலேசியாவிற்கு எந்தவிதமான பயனும் இல்லை

ஜன.10-

பத்து பூத்தே தீவு தொடர்பான அனைத்துலக நீதிமன்றத்தின் முடிவை மறு ஆய்வு செய்வதால் மலேசியாவிற்கு எந்தவிதமான பயனும் இல்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறியுள்ளார். பத்து பூத்தே தீவு என்பது ஒரு சிறிய பாறை மட்டுமே என்றும், அதை வைத்துக்கொண்டு நாடு பெரிய அளவில் பயனடையப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் தன்னை நீதிமன்றத்தில் விசாரிக்கவும் அவர் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

தான் பிரதமராக இருந்த காலத்தில், புலாவு லாயாங்-லாயாங் தீவை மேம்படுத்தியது , லங்காவிக்கு வெளியே புதிய தீவுகளை உருவாக்கியது போன்ற செயல்கள் மூலம் நாட்டின் நிலப்பரப்பை விரிவுபடுத்தியதாக மகாதீர் கூறினார். பத்து பூத்தே தீவு விவகாரத்தில் அரசு எடுத்த முடிவுகள் நாட்டின் நலனுக்காகவே எடுக்கப்பட்டது என்றும், அதில் எந்தவிதமான தவறுகளும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் தன்னை துரோகி என்று கூறுபவர்களுக்கு நீதிமன்றத்தில் பதிலளிக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்