மற்ற இடங்கள் இருக்கின்றன, மசூதி எங்கே ? – கேள்வி எழுப்பினார் Radzi Jidin

ஜன. 8-

2026 மலேசியாவுக்கு வருகை புரியும் ஆண்டு காணொளியில் நாட்டின் மசூதிகள் இடம்பெறாதது குறித்து புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Dr Radzi Jidin கேள்வி எழுப்பியுள்ளார். மற்ற சமய வழிபாட்டுத் தலங்கள் காணொலியில் காட்டப்பட்ட நிலையில், மசூதிகள் விடுபட்டது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tourism Malaysiaவின் முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட 41 வினாடி காணொளியில், கோலாலம்பூர், சரவாக், கெடா, சிலாங்கூர், மலாக்கா போன்ற இடங்களில் உள்ள சுற்றுலாத் தலங்கள் காட்டப்படுகின்றன. ஆனால், மசூதிகள் எதுவும் இடம்பெறவில்லை என்றார் அவர்.

இந்த அதிகாரப்பூர்வ விழாவை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைத்தார். சூரிய கரடி இந்த பிரச்சாரத்தின் சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகச்சிறிய கரடி இனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரச்சாரத்தின் மூலம் அடுத்த ஆண்டு 35.6 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் என்று Tourism Malaysia நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் சுற்றுலாத் துறை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்