ஜன.11-
முன்மொழியப்பட்டுள்ள காலநிலை மாற்றச் சட்டம், மலேசியாவின் பசுமை பொருளாதார இலக்குகளை அடைய உதவும் என்று இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சஅமைச்சர் Nik Nazmi Nik Ahmad தெரிவித்துள்ளார். இந்த மசோதா, நாடு எந்த வகையான தொழில்களை ஈர்க்க விரும்புகிறது என்பதற்கான தெளிவான கட்டமைப்பை வழங்குகிறது. மேலும், அரசாங்கம் குறைந்த செலவு பொருளாதாரத்திலிருந்து அதிக மதிப்புள்ள பொருளாதாரத்திற்கு மாறுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட அதிக முயற்சிகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தவறினால், இந்த நூற்றாண்டின் இறுதியில் தென்கிழக்கு ஆசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11 விழுக்காடு வீழ்ச்சியடையும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. பொருளாதார தாக்கம் என்பது கிரகத்தின் மூன்று முக்கிய நெருக்கடிகளில் ஒன்று என்றும், மாசுபாடு , பல்லுயிர் இழப்பு ஆகியவை மற்ற இரண்டு நெருக்கடிகள் என்றும் நிக் நஸ்மி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மனிதர்கள் இயற்கையின் ஒரு அங்கம் என்பதை உணரும்போது மட்டுமே பிரச்சினையின் மையத்தை அடைய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.