மலேசியாவுக்கு மிகவும் அர்த்தமுள்ள வாரம் – பிரதமர் பெருமிதம்!

ஜன.11-

பிரதமர் அன்வார் இப்ராஹிம் இந்த வாரத்தை மலேசியாவிற்கு மிகவும் முக்கியமான, பயனுள்ள வாரமாகக் குறிப்பிட்டார். மலேசியா நட்பு நாடுகளான சிங்கப்பூர், இந்தோனேசியா, ஜப்பான் நாடுகளின் தலைவர்களை வரவேற்றதே இதற்கு காரணம். இந்த வருகைகள் மலேசியாவிற்குப் புதிய ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய உதவியுள்ளன எனப் பிரதமர் குறிப்பிட்டார்ர்.

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், Lawrence Wong, Sinar Mas, தலைவர் Franky Oesman Widjaja, ஜப்பான் பிரதமர் Shigeru Ishiba ஆகியோரின் வருகையை பிரதமர் அன்வார் வரவேற்றார். இந்த சந்திப்புகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்வது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, இந்தோனேசிய அதிபர் Prabowo Subiantoவின் வருகை அவர் அதிபராக பதவியேற்ற பிறகு மலேசியாவிற்கு முதல் முறையாகும்.

இந்த சந்திப்புகள் ஏற்கனவே உள்ள நட்புறவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மலேசிய மக்களுக்கும் நாட்டிற்கும் நன்மை பயக்கும் புதிய கூட்டு முயற்சிகளுக்கு வழி வகுக்கும் என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார். பொருளாதார ஒத்துழைப்பு, வட்டார வளர்ச்சி குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
ஆசியான் அமைப்பின் தற்போதைய தலைவராக மலேசியா இருப்பதால், வட்டார கூட்டு செழிப்பை உறுதி செய்வதற்காக மடானி அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று பிரதமர் அன்வார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார். இந்த வாரத்தில் நடைபெற்ற சந்திப்புகள் மலேசியாவின் சர்வதேச உறவுகளை வலுப்படுத்த உதவியுள்ளன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்