மலேசியா சிங்கப்பூர் இடையே நிலுவையில் உள்ள பிரச்னைகளை தீர்க்க மீண்டும் விவாதம்

ஜோகூர்பாரு, ஜன.8-


மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்னைகளை பற்றிய விவாதங்களை மீண்டும் தொடங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளன.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக இரு அண்டை நாடுகளுக்கு இடையில் நிலுவையில் உள்ள பிரச்னைகள் குறித்த விவாதத்தை மீண்டும் தொடங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், மலேசியாவிற்கு மேற்கொண்ட இரண்டு நாள் அதிகாரத்துவ வருகையின் பலனாக நீர் விநியோகம், கடல் மற்றும் வான்வெளி எல்லை நிர்ணயம் போன்ற நீண்ட கால பிரச்னைகளை பற்றிய விவாதங்களை தொடங்குவதென இரு நாட்டுப் பிரதமர்களும் முடிவு செய்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்