ஜன.11-
ஸ்கூடாய் ஆற்றில் ஏற்பட்ட மாசுபாட்டிற்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகளே காரணம் என்று ஜோகூர் சுற்றுச்சூழல் துறை இயக்குநர் Mohd Famey Yusoff தெரிவித்தார். தொடக்கக் கட்ட விசாரணையில், சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் ஆற்றில் கலந்திருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாட்டில் ஏற்பட்ட பாதிப்பு இந்த பிரச்சனைக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
Kampung Sepakat Baruவில் இரண்டு வாரங்களாக நிலவி வந்த துர்நாற்றப் பிரச்சனை தற்போது குறைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழக்கூடாது என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆற்றில் கருப்பு நீர் வெளியேற்றத்தை கண்டறிந்த பிறகு, ஸ்கூடாய் ஆற்றிலிருந்து துர்நாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று மக்கள் சந்தேகித்தனர்.