மாடர்ன் கங்குவாவை பார்க்க ரெடியா? புது போஸ்டருடன் வெளியான மாஸ் அப்டேட்!

பிரபல நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் மாதம் 14ஆம் தேதி உலக அளவில் 38 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் திரை வரலாற்றிலேயே மிகவும் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம், முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தை கையாண்டு இருக்கிறது என்றால் அது மிகையல்ல. முதல் முறையாக இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவா உடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின், ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை தயாரிக்கும் நிலையில், உலக அளவில் இப்படம் 2000 கோடி ரூபாய் கட்டாயம் வசூல் செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் ஞானவேல் ராஜா. 

மேலும் இந்த திரைப்படத்தின் முதல் பாதியை முழுமையாக பார்த்து முடித்துள்ள அவர், நடிகர் சூர்யாவை தொடர்பு கொண்டு இப்படத்தை பற்றி பெரிய அளவில் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி “வேட்டையன்” திரைப்படம் வெளியாக இருந்த அதே நாளில் கங்குவா வெளியாவதாக இருந்தது. இருப்பினும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 50 ஆண்டுகளாமாக தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்து வருகிறார். ஆகவே அவருடைய திரைப்படத்தோடு இணைந்து போட்டியிடுவது ஏற்புடையதாக இருக்காது என்று கூறி தங்களுடைய கங்குவா திரைப்படத்தை அந்த தேதியில் இருந்து விலக்கிக் கொள்வதாக அப்படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

இந்த நிலையில் தீபாவளிக்கு அந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நவம்பர் 14ஆம் தேதி எந்தவித போட்டியும் இல்லாமல் தனியாக இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இவை ஒருபுறம் இருக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் நாளை கங்குவா திரைப்படத்திலிருந்து “யோலோ” என்கின்ற இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. 

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்