முகைதீனுக்கு எதிராக 5 விழுக்காடு வட்டி விகிதம் கோரி லிம் குவான் எங் மேல்முறையிடு

கோலாலம்பூர், டிச. 18-


முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிராக தாம் தொடுத்த அவதூறு வழக்கில் வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து தமக்கு வழங்கப்படவிருக்கும் 1.35 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டுத்தொகைக்கு 5 விழுக்காடு விகிதம் வட்டிக்கோரி, டிஏபி தலைவர் லிம் குவான் எங் மேல்முறையீடு செய்துள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் தாம் நிதி அமைச்சராக பொறுப்பேற்று இருந்த போது, இஸ்லாமிய தொண்டு நிறுவனமான யாயாசான் அல்புகாரிக்கு வரி விதித்தாகவும், நிலுவையில் உள்ள வரியையும் செலுத்துமாறு உத்தரவிட்டதாகவும் கூறி, தமக்கு எதிராக அவதூறான தகவலை பரப்பி, முஸ்லிம் மக்கள் தம்மீது வெறுப்புக்கொள்வதற்கு முகைதீன் தூண்டியதாக லிம் தமது வழக்கு மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

எனினும் தாம் அத்தகைய உத்தரவை பிறப்பிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் நிரூப்பிக்கப்பட்டது மூலம் முகைதீன் யாசின் மேற்கண்ட தொகையை தமக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக லிம் குவான் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்