கோலாலம்பூர், டிச. 5-
வங்காளதேசத்தில் நிகழ்ந்து வரும் இனபடுகொலையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முழு வீச்சில் தொடர்ந்து கண்டிக்க வேண்டும் என்று செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன், மேலவைக்கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில் வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினருடன் இணைந்து பிரதமர் தம்முடைய ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் புலப்படுத்த வேண்டும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.
வங்காளதேசத்தில் எந்தவொரு பின்புலத்தையும் பார்க்காமல் அந்நாட்டில் மக்களிடையே ஒற்றுமையும், ஒருமைப்பாடும், நல்லிணக்கமும், அமைதியும் தழைத்தோங்குவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இத்தகைய ஆதரவை நல்குவது அவசியமானதாகும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் வலியுறுத்தினார்.
மேலவைக்கூட்டத்தில் 2025 ஆம் ஆண்டு விநியோக சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்ட டாக்டர் லிங்கேஸ்வரன், மலேசியா சார்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், வங்காளதேசத்திற்கு இத்தகைய கோரிக்கையை விடுக்க வேண்டிய அவசியத்தையும் தமது உரையில் வலியுறுத்தினார்.