வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை காவல் துறையினர் விரைவாக மீட்டனர்

ஜன.11-

கோத்தா திங்கி, Taman Aman பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை காவல் துறையினர் விரைவாக மீட்டனர். நள்ளிரவில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் தமது TOYOTA VIOS காரை ஓட்ட முயன்ற 52 வயது நபர் ஒருவர், கார் மின் கம்பத்தில் சிக்கியதால் ஆபத்தில் இருந்தார். அவரை காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர் எனத் தெரிவித்தார் கோத்தா திங்கி மாவட்டக் காவல் துறைத் தலைவர் Superintendan Yusof Othman. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கார் ஓட்டுவதை தவிர்க்குமாறு அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்