ஃபர்ஸ்ட் ஆஃப் எக்ஸ்ட்ரடினரி ! அரசியலுக்குள் நடக்கும் அரசியலை பேசிய ‘எலக்சன்

இந்தியா, மே 17-

நடிகரும், இயக்குனருமான உறியடி விஜயகுமார் நடித்துள்ள, ரீல் குட் பிலிம்ஸின் ‘எலக்சன்’ திரைப்படம் குறித்து ரசிகர் கூறியுள்ள கருத்து இதோ.

‘உறியடி’, ‘உறியடி 2’, ‘ஃபைட் கிளப்’ என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எலக்சன்’ திரைப்படம், மே 17ஆம் தேதி, அதாவது இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இப்படம் குறித்து ஏசியா நெட் தளத்திற்கு ரசிகர் பகிர்ந்து கொண்ட கருத்து இதோ.

‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ திரைப்படம் அரசியலுக்குள் நடக்கும் அரசியலை தோலுரித்து காட்டும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது.  விஜய்குமார், ஹீரோவாக நடிக்க,  ‘அயோத்தி’ புகழ் பிரீத்தி அஸ்ராணி, ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ரிச்சா ஜோஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார். 

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்