அகம்பரமிற்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் உதவி

உடல்நிலை காரணமாக தனது இரு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெரியவர் அகம்பரம், தனது மோட்டார் சைக்கிளை மாற்றியமைக்க பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் உதவியை நாடியுள்ளார்.

அகம்பரம், தற்போது தனது மனைவியுடன் மலிவு விலை அடுக்குமாடி வீட்டில் வசித்து வருகிறார். சமூக நல இலாகாவின் வாயிலாக கிடைக்கக்கூடிய அலவன்ஸ் உதவித் தொகையை நம்பி அவர்களின் வாழ்வாதாரம் உள்ளது. இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளை மாற்றியமைப்பதற்கு, மேற்கொண்டு தேவைப்படக்கூடிய பணத்திற்கு வழியின்றி சிரமத்தை எதிர்நோக்கிய அகம்பரம், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் உதவியை நாடினார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியம், பெரியவர் அகம்பரமின் நிலையை அறிந்து, தனது வாரியக் கூட்டத்தில் ஏகமனதாக எடுத்த முடிவின் படி அவருக்கு 2 ஆயிரத்து 500 வெள்ளி உதவித் தொகை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்ததாக பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் டாக்டர் இரா. லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று அந்த உதவித்தொகைக்கான காசோலையும் அகம்பரமிடம் தாம் ஒப்படைத்ததாக டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியம், மாநிலத்தில் உள்ள இந்துக்களுக்கு உதவும் தனது திட்டங்கள் அனைத்திலும் வெளிப்படத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று வாரியத்தின் புதிய தலைமைத்துவம் எடுத்துள்ள உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த உதவி அமைந்துள்ளது என்று டாக்டர் லிங்கேஸ்வரன்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்