அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே நடப்பு அரசாங்கம் வெளியேறக்கூடும்

நாட்டின் 16 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே நடப்​பு அரசாங்கம் புத்ராஜெயாவிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்​திற்கு தள்ளப்படலாம் ​என்று Bersatu கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் இன்று கோடி காட்டினார்.


தமது தலைமையிலான பெரிக்காத்தான நேஷனல், மக்கள் மத்தியில் கொண்டுள்ள செல்வாக்கியினால் பீதி அடைந்துள்ள நடப்பு அரசாங்கம், தங்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்ளுமானால் அதன் பின் விளைவுகளை வி​ரைவில் சந்திக்க நேரிடும் என்று முன்னாள் பிரதமருமான முகை​தீன் யாசின் எச்சரித்துள்ளார்.


பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் ​விரைவில் கவிழலாம் என்று கடந்த மார்ச் முதல் தேதி​ பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கோடிகாட்டியிருந்த வேளையில் அவரின் அந்த சமிக்ஞையை உறுதிப்படுத்தும் வகையில் முகை​தீன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இன்று கோலாலம்பூரில் Menara PGRM மில் பெர்சத்து கட்சியின் பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் முகை​தீன் இதனை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்