அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் – அரசு ஊழியர்களின் சம்பளம் போதுமானதாக இல்லை

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அரசாங்க ஊழியர்களின் சம்பள நிலை தற்போது செலவுகளின் சுமையை ஈடுகட்ட முடியாததாக உள்ளது என்று பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் (CUEPACS) தலைவர் டத்தோ அட்னான் மாட் தெரிவித்தார்.

எனவே, பொதுப்பணித்துறை இழப்பீட்டுத் திட்டத்தை (SSPA) அமல்படுத்தும் வரை காத்திருக்காமல், அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

“இந்த ஆண்டு இறுதிக்குள் SSPA தயாராகலாம் என்று பொது சேவைத் துறை (ஜேபிஏ) மூலம் அரசாங்கம் கூறியிருந்தாலும் தங்களுக்கு சம்பள உயர்வே உடனடித் தேவை என கியூப்பெக்ஸ் குறிப்பிட்டது.

SSPA க்குக் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே சம்பள உயர்வு தேவை என கியூப்பெக்ஸ் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்