அதிகரித்து வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை

புத்ராஜெயாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பு, நாட்டில் வேலை செய்யும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு தங்குமிடமாக அமைந்துள்ளது.

அவ்விடத்தில் மலேசிய குடிநுழைவுத்துறையினரால் இன்று நள்ளிரவு 12 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் வெவ்வேறு காரணங்களின் அடிப்படையில் 25 பேர் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அந்நிய பிரஜைகள் வசித்து வருவதாக சந்தேகிக்கப்படும் 47 வீடுகள் உள்ளடக்கிய நான்கு குடியிருப்பு கட்டடங்களில் இச்சோதனை நடத்தப்பட்டது.

அக்குடியிருப்பு பகுதியில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் அவர்களின் ஒழுக்கமற்ற செயல்கள் பல விளைவுகளையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருவதாக குடியிருப்புவாசிகளிடமிருந்து கிடைக்கபெற்ற புகாரை அடுத்து இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய குடிநுழைவுத்துறையின் இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

சட்டவிரோத குடியேற்றவாசிகளை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்களின் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரஸ்லின் ஜூசோ விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்