அது சிலாங்கூர் சுல்தானை குறிப்பாக இருந்தால் விசாரணை செய்யப்பட வேண்டும்

ஜுலை 01-

மலேசிய தேசிய கால்பந்தாட்டத்துறையில் தோக்கோங் உருவாகியிருப்பதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய அறிக்கை, மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானை குறிப்பாத இருக்குமானால், அது குறித்து விசாரணைசெய்யப்பட வேண்டும் என்று கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி முஹம்மது நூர் கேட்டுக்கொண்டார்.

சம்பந்தப்பட்டவர் தோக்கோங் என்ற வார்த்தையை உபயோகித்துள்ளார். அவரின் இந்த உவமை, சிலாங்கூர் சுல்தானை குறிப்பதாக இருக்குமானால் அரச பரிபாலனம், இனம் மற்றும் மதம் ஆகியவற்றை உள்ளடக்கிய 3R பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று சனூசி கோரிக்கை விடுத்துள்ளார்.

சுங்கை பகப் இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் கெடா மந்திரி பெசார் மேற்கண்டவாறு கூறினார்.

எனினும் சனூசியிடம் இந்த கேள்வியை எழுப்பிய செய்தியாளர்களும், சனூசியும், தோக்கோங் என்ற வார்த்தையை பயன்படுத்திய சம்பந்தப்பட்ட நபரின் பெயரை குறிப்பிடவில்லை.

இருப்பினும் இவ்விவகாரம் தொடர்பில் சமூக வலைத்தளத்தில் கருத்தை பதிவேற்றம் செய்துள்ள ஜோகூர் இடைக்கால சுல்தான், துங்கு இஸ்மாயில் சிலத்தான் இப்ராஹிம் – மை குறிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு கடந்த மே 10 ஆம் தேதி ஜோகூர் தாருல் தக்சிம் -மிற்கும் சிலாங்கூர் FC-க்கும் இடையிலான கால்ந்தாட்டத்தில் சிலாங்கூர் குழு கலந்து கொள்ள தவறியதற்காக அக்குழுவினருக்கு எதிராக ஒரு லட்சம் வெள்ளி அபராதம் உட்பட நான்கு வகையான தண்டனையை மலேசிய லீக் கால்பந்தாட்ட மன்றம் விதித்தது.

சிலாங்கூர் FC- க்கு இத்தகைய அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதற்கு எதிராக சிலாங்கூர் சுல்தான், சுலாதான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா தமது கோபத்தை வெளிப்படுத்தினார்.

சுல்தானின் கோபத்தின் வெளிப்பாடாக சிலாங்கூர் FC க்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் வெள்ளி அபராதம் 60 ஆயிரம் வெள்ளியாக குறைக்கப்பட்டது.

தண்டனையை குறைத்து இருக்கும் மலேசிய லீக் மன்றத்தின் நடவடிக்கைக்கு தமது அதிருப்தியை வெளிப்படுத்திய ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் , குற்றம் இழைத்த குழுவினர் சுல்தானின் உதவியை நாடுகின்றனர் என்பதற்கு உவமையாக தோக்கோங் என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்