அது மாநில அரசாங்கத்தின் முழு உரிமையாகும்

கோலாலம்பூர், ஜூன் 24-

சுற்றுப்பயணிகள் அணியக்கூடிய ஆடைகள் மற்றும் மதுபானம் பயன்பாடு தொடர்பாக நடப்பில் உள்ள விதிமுறைகளை கடுமையாக்குவது ஒவ்வொரு மாநில அரசாங்கத்தின் உரிமையாகும் என்று சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார துணை அமைச்சர் கைருல் பிர்தௌஸ் அக்பர் கான் தெரிவித்தார்.

சுற்றுப்பயணிகள், கண்களை உறுத்தும் ஆடைகளை அணிவது மதுபான பயன்பாடு தொடர்பில் சில மாநில அரசாங்கங்கள் விதித்துள்ள கடும் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் இன்று நாடாளுமன்றத்தில் துணை அமைச்சர் தற்காத்து பேசினார்.

நாட்டின் முன்னணி சுற்றுலாத் தலமான லங்காவியில் முஸ்லிம் சுற்றுப்பயணிகளுக்கு எதிராக கெடா மாநில அரசாங்கம் விதித்துள்ள கடும் கட்டப்பாடுகள் தொடர்பில் செப்புத்தே எம்.பி. தெரசா கோக் எழுப்பிய கேள்விக்கு கைருல் பிர்தௌஸ் தற்காத்து பேசினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்