அந்த பரிந்துரை கவனமாக ஆராயப்பட வேண்டும்

லங்காவி தீவு, முஸ்லிம் சுற்றுப்பயணிகளின் இலக்குரிய ஒரு சுற்றுலாத் தளமாக மேம்படுத்தும் திட்டம் குறித்து சுற்றுலா, கலை, கலாச்சார துணை அமைச்சர் Khairul Firdaus Akbar மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று DAP தலைவர் Lim Guan Eng கேட்டுக்கொண்டுள்ளார்.

லங்காவி அனைவருக்கும் திறந்து விடப்பட வேண்டிய அனைத்துலக அந்தஸ்திலான ஒரு சுற்றுலாத் தளமாகும். இதனை குறிப்பிட்ட தரப்பினரின் விருப்பத்திற்குரிய சுற்றுலாத் தளமாக வகைப்படுத்தப்படுமானால் சுற்றுலாத்துறையை அடிப்படையாக கொண்ட வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்று லிம் குவான் எங் அச்சம் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் உள்ள யுனெஸ்கோ குளோபல் ஜியோபார்க் (UNESCO Global Geopark ) போன்று ஒரு முக்கிய சுற்றுலாத் தளமாக லங்காவி வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பா, இந்தியா மற்றும் சீனா உட்பட முஸ்லிம் அல்லாத பல நாட்டு சுற்றுப்பயணிகளின் தேர்வுக்குரிய சுற்றுலா மையமாக லங்காவி விளங்கி வருகிறது.

அதனை குறிப்பிட்ட சமுதாயத்தின் சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவது என்பது முஸ்லிம் அல்லாத சுற்றுப்பணிகளின் வருகையை கட்டுப்படுத்தி விடும் என்று லிம் குவான் எங் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்